வேதிப் பொறியியல்

வேதிப் பொறியியல் என்பது இயல் அறிவியல் மற்றும் வேதியியல் சார்ந்தவற்றோடு தொடர்புடைய ஒரு பொறியியல் துறையாகும். பலர் இதை தவறாக வேதியியலுடன் நேரடித்தொடர்புள்ளதாக கருதுவர். எனினும் வேதியியல் கூறுகள் வேதிப்பொறியியலின் ஒரு பகுதியே ஆகும்.

பொருளடக்கம்

[தொகு] அறிமுகம்

இயற்பியல், வேதியியல், கணிதம் முதலியவற்றின் கருத்துகளைப் பயன்படுத்தி நேரடியாகப் பயன்பாடற்ற மூலப்பொருட்களையோ அல்லது மூல வேதிப்பொருட்களையோ, முடிந்த வரையில் குறைந்த அளவிலேயே ஆற்றலைப் பயன்படுத்தி விலைமதிப்புமிக்க, பயன்படுத்தக்கூடிய பொருட்களாக உருமாற்றுவது வேதிப்பொறியியலின் மூல நோக்கமாகும். இத்தோடு புதிய உத்திகள், புதிய தொழிநுட்பஙகள், புதிய பொருட்கள் ஆகிவற்றை கண்டறிவதும் இத்துறையின் நோக்கத்தினுள் அடங்கும். முன்னது தொழில்முறைச் செயல்களை சார்ந்தது பின்னது ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியைச் சார்ந்தது. இத்துறையில் பணிபுரிவோரை வேதிப் பொறியாளர் என அழைப்பர்.

வேதிப் போறியியல் பெரும்பாலும், பல்வேறு பொருட்களைப் பெரிய அளவில் உற்பத்தி செய்வதற்கான செயல்முறைகள், மற்றும் அதன் பராமரிப்பு போன்றவற்றோடு தொடர்புடையது. இதனுள் வேதிசார் தொழிற்சாலைகள் வடிமைத்தல் மற்றும் பராமரித்தல் ஆகியவையும் அடங்கும். வேதிப் பொறியியலின் இந்தப் பிரிவில் பணிபுரிபவரை செயல்முறைசார் பொறியாளர்(Process Engineer) என வேதிப்பொறியிலில் அழைப்பர். வணிகநோக்கில் ஒரு பொருளை பெரிய அளவில் உற்பத்தி செய்யும் போது அந்த பொருளைச் சார்ந்த வேதிவினைகளை மட்டுமல்லாது அதன் உற்பத்திக்கு தேவையான ஆற்றல், மூலப்பொருட்களின் தன்மைகள், செயல்முறையின் செயல்திறன், அதற்கான செலவுகள் என பல்முனைக்கூறுகளை ஆராய வேண்டும். இந்தச் செயலே வேதியலையும் வேதிப் பொறியியலையும் வேறுபடுத்துகிறது. முன்னது ஆய்வுக்கூடத்தில் சிறிய அளவில் நடப்பது, பின்னது வணிகநோக்கில் தொழில்முறை சார்ந்து நடைபெறுவது.


[தொகு] பயன்பாடுகள்

வேதிப்பொறியியல் மிகப்பரந்த பயன்பாடுகளைக் கொண்டுள்ளது. காகிதம் (தாள்) தயாரிதல், நீர் தூய்மைப்படுத்தல், பல விதமான வேதிப்பொருட்களை உற்பத்தி செய்தல், பீங்கான், சுட்டாங்கல் (ceramic) தொடர்பான பொருட்களை தயாரித்தல், பெட்ரோலியம் தொடர்பான வேதியியல் தயாரிப்புகள், உழவார வேதிப்பொருட்கள், வேதிப்பொருள் உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வெடிமருந்துகள், வாசனைப் பொருட்கள் (நறுமணமிகள்), சுவைக்கூட்டும் பொருட்கள், நிறமூட்டிகள் (நிறமிகள்), மருந்துகள், பிளாஸ்டிக் தயாரித்தல் என மிகப்பல பயன்துறைகளைக் கூறலாம். .

அண்மைக்காலமாக, வேதிப் பொறியியலாளர்கள் உயிரித்தொழில்நுட்பம் சார்ந்த துறைகளிலும் பணி புரிகின்றனர். வேதிப் பொறியியலின் தாக்கம் உயிரித்தொழில்நுட்பத்திலும் காணப்படுகிறது. வேதிப் பொறியியலைச் சார்ந்து உயிர்வேதிப் பொறியியலும் தற்காலத்தில் வேகமாக வளர்ந்து வரும் துறைகளுள் ஒன்றாக விளங்குகிறது.

[தொகு] பிரிவுகள்

வேதிப்பொறியியல் கீழ்க்கண்ட அடிப்படைத்துறைகளாக பிரிக்கப்பட்டுள்ளது

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளி இணைப்புகள்


SEO Tools SEO Tools tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk