ரிச்சர்ட் ஸ்டால்மன்

ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன்
ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன்
கூகிள் நிறுவனத்தில் உரையாற்றுகையில்...
கூகிள் நிறுவனத்தில் உரையாற்றுகையில்...

ரிச்சர்ட் மாத்யூ ஸ்டால்மன் (Richard Matthew Stallman, பி. மார்ச் 16, 1953) என்பவர் கட்டற்ற மென்பொருள் இயக்கம் (Free software movement), க்னூ திட்டம் (GNU Project), கட்டற்ற மென்பொருள் அமையம் (Free Software Foundation), நிரலாக்க தளையறுப்பு லீக் (League for Programming Freedom) போன்றவற்றின் தோற்றுவிப்பாளராவார்.

இவர் ஒரு சிறந்த நிரலாளருமாவார். இவரது சிறந்த மென்பொருட் படைப்புக்களாக ஈமாக்ஸ் (Emacs. பின்னாளில் GNU Emacs), GNU C Compiler, GNU வழுத்திருத்தி போன்றவை கருதப்படுகின்றன.

க்னூ பொதுமக்கள் உரிமத்தின் ஆக்கியோரும் இவரே.

தொண்ணூறுகளிலிருந்து தொடர்ச்சியான அரசியல் நடவடிக்கைகளிலும், கட்டற்ற மென்பொருள் தத்துவ ஆக்கம், பரவலாக்கம் , ஆலோசனை வழங்கல் போன்ற விடயங்களிலும் தன்னுடைய பெரும்பகுதி நேரத்தினை செலவிட்டு வருகிறார். இவர் உரையாற்றுவதற்காக வழங்கப்படும் பணமே இவரது சொந்த வருமானமாக இருக்கிறது.

[தொகு] வாழ்க்கை வரலாறு

ஸ்டால்மன் நியூயோர்க் நகரில் பிறந்தார். முதன்முதலாக தனது முதுநிலை உயர்பாடசாலையில் கற்கும்போது 1969ம் ஆண்டளவில் கணினி ஒன்றினை பயன்படுத்தும் வாய்ப்பினை பெற்றார்.

உயர்பாடசாலை பட்டமளிப்புக்கு பின் ஒரு கோடைகாலத்தில் தனது முதல் நிரலாக்கமான PL/I கணி மொழிக்கான Preprocessor ஒன்றினை IBM 360 கணினியில் எழுதி முடித்தார்.

அதேவேளை, Rockefeller பல்கலைக்கழகத்தின் உயிரியல் ஆய்வுகூடத்தில் தன்னார்வ ஆய்வுகூட உதவியாளராக பணியாற்றினார்.

ஜூன் 1971 அளவில் ஹவார்ட் பல்கலைக்கழகத்தின் முதலாமாண்டு மாணவனாக இருந்த சமயம் MIT செயற்கை அறிவு ஆய்வுகூடத்தில் நிரலாளரானார்.

[தொகு] வெளி இணைப்புகள்


system wymiany linków wymiana linkami wymiana linkami SEO Tools system wymiany linków tanie kredyty gotówkowe kreatyna Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Sejm Tyk