சுவீடிய மொழி

சுவீடிய மொழி
 நாடுகள்: சுவீடன் மற்றும் பின்லாந்து 
பகுதி: வடக்கு ஐரோப்பா
 பேசுபவர்கள்: 9.3 மில்லியன்
மொழிக் குடும்பம்: இந்தோ-ஐரோப்பிய
 ஜெர்மானியம்
  வட ஜெர்மானியம்
   கிழக்கு ஸ்கன்டினேவியம்
    சுவீடிய மொழி 
அரசு ஏற்பு நிலை
அரசு அலுவல் மொழியாக ஏற்பு: Flag of Europe ஐரோப்பிய ஒன்றியம்
எஸ்தோனியாவின் கொடி எஸ்தோனியா (in Noarootsi along with Estonian) [1]
பின்லாந்தின் கொடி பின்லாந்து
சுவீடன் கொடி சுவீடன் (de facto)
நோர்டிக் அவை
நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: =சுவீடிய மொழி அவை (சுவீடனில்)
Svenska språkbyrån (பின்லாந்தில்)
மொழிக் குறியீடுகள்
ISO 639-1: sv
ISO 639-2: swe
ISO/FDIS 639-3: swe 

சுவீடிய மொழி ஒரு ஒரு வட ஜெர்மானிய மொழியாகும். இது பெரும்பாலும் சுவீடனிலும், பின்லாந்தின் சில பகுதிகளிலும் வழங்கி வருகின்றது. இம் மொழி பேசுவோர் தொகை சுமார் 9.3 மில்லியன் ஆகும். இம்மொழியும், டேனிய, நார்வேஜிய மொழிகளும் தம்மிடையே ஒன்றுக்கொன்று புரிந்துகொள்ளக் கூடியவை. சுவீடிய மொழி, வைக்கிங் காலகட்டத்தில், ஸ்கன்டினேவியாவின் பொது மொழியாக இருந்த பழைய நோர்ஸ் மொழியிலிருந்து உருவானது.

தேசிய மொழியான பொது சுவீடிய மொழி மத்திய சுவீடியக் கிளைமொழிகளில் இருந்து 19 ஆம் நூற்றாண்டில் உருவானது. இது 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உறுதியாக நிலை பெற்றுவிட்டது. எனினும், பழைய நாட்டுப்புறக் கிளைமொழிகளில் இருந்து உருவான வேறுபாடுகள் இன்னமும் வழக்கில் உள்ளன. இதன் பேச்சு மொழியும், எழுத்து மொழியும் ஒருசீர்த் தன்மையுடன் தரப்படுத்தப்பட்டுள்ளன. சில கிளை மொழிகள், பொதுச் சுவீடிய மொழியிலிருந்து இலக்கணம், சொற்கள் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க அளவு வேறுபடுகின்றன. பல சமயங்களில் இவற்றுக்கு இடையேயான புரிந்து கொள்ளக்கூடிய தன்மையும் குறைவாகவே உள்ளது. இத் தகைய கிளைமொழிகளைப் பேசுவோர் பெரும்பாலும் நாட்டுப் புறங்களில், மிகவும் குறைந்த அளவினராலேயே பேசப்பட்டுவருகின்றன. இவ்வாறான மொழிகள் பற்றி ஆழமான ஆய்வுகள் நடத்தப்பட்டிருப்பதுடன், இவை உள்ளூர் மட்டத்தில் ஊக்குவிக்கப்பட்டு வந்தாலும், கடந்த நூற்றாண்டில் இவற்றின் பயன்பாடு குறைந்து வருகின்றது.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது

wymiana linkami wymiana linkami SEO Tools wymiana linkami kreatyna Gry Online Plaza 3 star hotel Los Angeles krynica noclegi Kredyty odnawialne