கருவிப் பெட்டிஏனைய மொழிகள்
|
கூடைப்பந்தாட்டம்கூடைப்பந்தாட்டம் (Basketball) சுமார் 200 நாடுகளில் ஆர்வத்துடன் விளையாடப்படுகிறது. இது மிக வேகமான, சில வினாடிகளுக்குள் ஆடுகளத்தின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனைக்கு சென்று திரும்பக்கூடிய ஆட்டம். உடலின் அனைத்து உறுப்புக்களையும் பயன்படுத்தும் வண்ணம் இந்த விளையாட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு அணிக்கு ஐந்து பேர் வீதம் களத்தில் இருப்பார்கள். அணியின் மொத்த பலமான பத்து முதல் 12 பேர்களில் இருந்து எப்பொழுது வேண்டுமானாலும் களத்தில் ஆடும் ஒருவரை வெளியில் அழைத்து, பதிலியாக மற்றொருவரை உள்ளே அனுப்பலாம். பந்தை கையால் எறிந்து எதிரணியினரின் கூடையில் விழ வைப்பதே நோக்கம். வெற்றி, தோல்வி பெரும்பாலும் கடைசி வினாடிகளில் தான் முடிவாகும்.
[தொகு] வரலாறுகனடாவில் பிறந்து ஐக்கிய அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் நகரில் வாழ்ந்த முனைவர் ஜேம்ஸ் நெய்ஸ்மித் என்பவர் பால்கனியில் கூடையைத் தொங்கவிட்டு அதில் பந்தை போட முயன்று விளையாடியதில் 1891ல் இந்த விளையாட்டு பிறந்தது. இன்றை நாள் வட அமெரிக்காவில் மிகப்பெரிய கூடைப்பந்தாட்டச் சங்கமும் உலகில் மக்கள் செல்வாக்கு மிகுந்த கூடைப்பந்தாட்டச் சங்கமும் என்.பி.ஏ. ஆகும். ஐரோப்பாவின் கூடைப்பந்தாட்டச் சங்கங்களில் ஐரோலீக் மிகப்பெரியதும் மக்கள் செல்வாக்கு மிகுந்ததும் ஆகும். சீனக் கூடைப்பந்தட்டச் சங்கம், ஆஸ்திரேலிய தேசியக் கூடைப்பந்தாட்டச் சங்கம், தென்னமெரிக்கச் சங்கம் உலகில் வேறு சில குறிப்பிட்டதாக சங்கங்கள் ஆகும். "ஃபீபா", அல்லது பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டக் கூட்டணி உலகில் மிகப்பெரிய பன்னாட்டுக் கூடைப்பந்தாட்டச் சங்கமாகும். இச்சங்கத்தில் என்.பி.ஏ. மற்றும் ஆஸ்திரேலியாவின் கூடைப்பந்துச் சங்கம் தவிர பல்வேறு தேசிய கூடைப்பந்துச் சங்கங்கள் உள்ளன. இச்சங்கம் பல நாடுகளிலுள்ள கூடைப்பந்தாட்ட வழக்கங்களும் சட்டங்களும் உருவாக்குகிறது. நாலு ஆண்டுகளுக்கு ஒரு பன்னாட்டு போட்டி ஃபீபா ஒழுங்கப்படுகிறது. ஸ்பிரிங்ஃபீல்ட், மாசசூசெட்ஸ்-இலிருந்த கூடைப்பந்து புகழவை உலகில் மிக உயர்ந்த வீரர்களும் பயிற்றுனர்களும் துதிக்கிரது. [தொகு] ஆடுகளம்பந்தை கையால் தரையில் தட்டிக் கொண்டே ஓடும் பொழுது, பந்து எழும்புவதற்கு ஏதுவான கடினமான, சமமான தரை. நீளம் 28 மீட்டர், அகலம் 15 மீட்டர். களத்தின் இருமுனையிலும் தரையிலிருந்து 3.05 மீட்டர் உயரத்தில் ஒரு கூடை தொங்கும். கூடை என்பது 45 செண்டிமீட்டர் விட்டமுள்ள இரும்பு வளையமும், அந்த வளையத்திலிருந்து வட்டமான தொங்கும், அடிப்பாகம் திறந்த, கயிற்று வலையும் கொண்டதாகும். [தொகு] உத்திகூடைப்ந்தாட்டம் மிக வேகமான விளையாட்டாகும் . ஆதலால் அணிக்குள் மிகவும் ஒற்றுமை நிலவவேண்டும். பொதுவாக அணியை ஒரு பயிற்றுவிப்பாளர் பயிற்றுவிப்பார். இவரே அணியின் தந்திரோபாயங்களை முடிவு செய்வார். அணியிடம் பந்து இருக்கும்போது பந்தை கூடைக்குள் போடுவதும், எதிரணியிடம் பந்து இருக்கும்போது பந்து கூடைக்குள் விழாமல் தடுப்பது அல்லது பந்து மீதான கட்டுப்பாடை இழக்கச்செய்வதும் முக்கியமான செயற்பாடுக்ளாகும். [தொகு] ஆட்ட விதிகள்பந்தை எதிரணியின் கூடையில் எறிந்து விழ வைத்தால் அந்த அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைக்கும். கூடைக்கு முன்பு தரையில் வரைந்துள்ள அரை வட்டத்திற்கு வெளியே இருந்தவாறே கூடையில் பந்தை எறிந்து விழ வைத்தால் மூன்று புள்ளிகள் அளிக்கப்படும். அரை வட்டத்திற்கு உட்பக்கத்தில் ஒரு வட்டம் வரையப்பட்டு நடுவில் தடையில்லா எறிதலுக்காக கோடு போடப்பட்டிருக்கும். தங்கள் கூடையில் பந்தை விழாமல் தடுக்கும் போது தப்பாட்டம் (Foul Play) ஆடினால் எதிரணியினர் இந்த கோட்டில் நின்று தடையில்லாமல் கூடையை நோக்கி பந்தை எறிய (Free throw) வாய்ப்பு வழங்கப்படும். இவ்வாறு எறிந்து கூடையில் விழும் பொழுது ஒரு புள்ளி வழங்கப்படும். வீரர்கள், எதிரணியின் முனைக்கும், அவர்களது 'தடையில்லா எறிதல்' (Free-throw line) கோட்டிற்கும் இடையே மூன்று வினாடிகளுக்கு மேல் நிற்கக் கூடாது. எந்த வீரரும் ஐந்து வினாடிகளுக்கு மேல் பந்தைக் கையில் பிடிக்கக் கூடாது. தங்களது முனையில் பந்து கையில் கிடைத்தால் பத்து வினாடிகளுக்குள் அவர்கள் முன் பகுதிக்கு பந்தை எடுத்துச் செல்ல வேண்டும். சில போட்டிகளில் 30 வினாடிகளுக்குள் பந்தை தன் வசம் வைத்திருக்கும் அணி, எதிரணியின் கூடையில் பந்தை விழ வைக்க முயற்சிக்க வேண்டும் என்ற விதியும் சேர்க்கப்படுவதுண்டு. [தொகு] கூடைப்பந்து நிலைகள்
கூடைப்பந்தில் பொதுவாக இந்த ஐந்து நிலைகளை பயன்படுத்துவார்கள்.
சில வீரர்களுக்கு இரண்டு நிலைகளில் விளையாடமுடியும். இரட்டை பின்காவல் (Combo guard) என்பவர் பந்துகையாளி பின்காவலின் உயரத்தில் புள்ளிபெற்ற பின்காவல் மாதிரி மற்ற வீரர்களுக்கு இலகுவாக்கருதுக்கு பதில் முதலில் புள்ளிகளை பெற்ற பார்ப்பார்கள். அசையாளர் (Swingman) புள்ளிபெற்ற பின்காவலாவும் சிறு முன்நிலையாவும் விளையாடமுடியும். பந்துகையாளி முன்நிலை (Point forward) என்பவர் முன்நிலை மாதிரி உயரமாக கூடைக் கிட்ட விளையாடமுடியும், ஆனால் பந்துகையாளி பின்காவல் மாதிரி பந்தை கையாளித்து மற்றவருக்கு இலகுவாக்கருத்த முடியும். முன்-நடு நிலைகள் (Forward-center) வலிய முன்நிலையிலும் நடு நிலையிலும் விளையாடமுடியும். சில நிலைமைகளின் இந்த நிலைகளை மாற்றமுடியும். [தொகு] ஆட்ட நேரம்இரண்டு 20 நிமிட பகுதிகளாக ஆடப்படும். ஐந்து முறை தப்பாட்டம் ஆடும் வீரர் அந்த ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். சில இடங்களில் ஒரு ஆட்டத்தை நான்கு 12 நிமிடப் பகுதிகளாகவும் பிரித்து ஆடுவதுண்டு. என். பி. ஏ.-யில் இந்த முறை வழக்கத்தில் உள்ளது. இவ்வாறு ஆடும் போது ஆறு முறை தப்பாட்டம் ஆடும் வீரர் ஆட்டத்திலிருந்து விலக்கப்படுவார். [தொகு] ஒலிம்பிக்ஸ் நிலவரம்ஆண்களுக்கான கூடைப் பந்தாட்டம் 1936-ஆம் ஆண்டிலும், பெண்களுக்கான ஆட்டம் 1976-ஆம் ஆண்டிலும் ஒலிம்பிக்ஸில் சேர்க்கப்பட்டது. 1992 முதல் முழு நேர கூடைப் பந்தாட்டக்காரர்களும் ஒலிம்பிக்ஸில் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். ஒலிம்பிக்ஸில் இறுதிப் போட்டி முந்தைய காலத்தில் பெரும்பாலும் ஐக்கிய அமெரிக்காவிற்கும், சோவியத் யூனியன்/ரஷ்யா விற்கும் இடையே தான் நடந்தது. ஐக்கிய அமெரிக்கா 12 முறையும், சோவியத் யூனியன் இரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. அண்மைய காலத்தில் அர்ஜென்டினா, இத்தாலி, லித்துவேனியா போன்ற நாடுகளும் பன்னாட்டுப் போட்டிகளில் வென்றுள்ளன. 2004 ஒலிம்பிக் போட்டிகளில் அர்ஜென்டினா அணி தங்கப் பட்டத்தை வெற்றிபெற்றது. [தொகு] மேலும் பாருங்கள்[தொகு] வெளி இணைப்புக்கள்கூடைப்பந்தாட்டம் பற்றிய மேலதிக தகவல்களைப் பார்க்க தொடர்புடையத் திட்டங்கள்:
[தொகு] வரலாறு[தொகு] அமைப்புகள்
|
||||||||||||||||||||